இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் பன்னிரண்டு கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சியில் நேற்று முன்தினம்   காவல்துறையினரால்  மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சொகுசு பேரூந்தில் கடத்திச் செல்லப்பட்ட பன்னிரண்டு கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

வடக்குமாகாண சிரேஸ்ர காவல்துறை அதிபரின் வழிகாட்டலின் கீழ் இரவுவேலைகளில் பயணிக்கும் வாகனங்களை பரிசோதிக்கும் குழுக்கள் நியமிக்கப்பட்டு பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன.  அந்த வகையில்  நேற்று முன்தினம் பருத்துறையிலிருந்து மொனராகல நோக்கிச்சென்ற சொகுசு பேருந்தில் பயணபொதிகள் போன்று பொதி செய்யப்பட்ட   12கிலோக்கிராம் கஞ்சா காவல்துறையால்  பளையில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேரூந்தின் சாரதி கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply