இலங்கை பிரதான செய்திகள்

காலநிலை மாற்றத்தினால் கிளிநொச்சியில் பாதிப்பில்லை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தற்போது நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகள் பாதிப்புகளுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் கிளிநொச்சியில்  இதுவரைக்கும  சீரான காலநிலை நிலவி வருகிறது.

அவ்வவ்போது மழை பெய்து வருகின்ற போதும் பாதிப்புக்கள் எதுவும் இடம்பெறவில்லை. மாவட்டத்தில் உள்ள பெரிய நீh்ப்பாசனக் குளங்களின் நீர் மட்டம் உயர்வடைந்து வருகிறது.முக்கியமாக இரணைமடு குளத்தின் நீர் மட்டம் இன்று(01) காலை அளவீட்டின் படி 20 அடியாக நீர் மட்டம் காணப்படுகிறது.

மேலும் பூநகரி பிரதேசத்தில்  சில பகுதிகளில் கடற்றொழிலாளர்கள் தொழிலுக்கு செல்லாத நிலையும் காணப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றத்தின் பின்னர் இந்த எட்டு வருடங்களில் நிரந்தர வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படாத மக்கள் மழை காரணமாக  பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துள்ளனாட பிரதேச மக்கள் அமைப்புகள் சுட்டிக்காட்டுக்கின்றன.

Add Comment

Click here to post a comment

Leave a Reply