இலங்கை பிரதான செய்திகள்

கொல்லப்பட்ட யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோரை ஜனாதிபதி சந்திக்க உள்ளார்

maithri3
குளோபல் தமிழ் செய்தியாளர் கொழும்பு
கொல்லப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 21ம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடம்பெயர் மக்களுக்காக நிர்மானிக்கப்பட்ட வீடுகளை ஒப்படைக்கும் நோக்கில் இன்றைய தினம் மாலை யாழ்ப்பாணத்திற்கு செல்ல உள்ளார். காணிகள் விடுவிக்கப்படுவது குறித்தும் ஜனாதிபதி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களை மீளத் திறப்பது தொடர்பில் புனர்வாழ்வு, இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் மாணவர் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *