இலங்கை பிரதான செய்திகள்

பாலியல் தொல்லை கொடுத்த இராணுவ சிப்பாய் நாச்சிக்குடா காவல்துறையினரால் கைது


குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
கிளிநொச்சி முழங்காவில் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு தனது மர்மஉறுப்பை காட்டிய இராணுவ சிப்பாய் ஒருவரை நாச்சிக்குடா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.   பேருந்தில் குறித்த பெண் பயணம் செய்து கொண்டிருந்த போது அதே பேருந்தில் பயணம் செய்த 35 வயதுடைய இராணுவ சிப்பாய் இவ்வாறு தனது  மர்மஉறுப்பை  41 வயதுடைய குறித்த பெண்ணுக்கு காட்டி ஆபாச சைகைகளையும் காட்டி , பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

அது தொடர்பில் குறித்த பெண் நாச்சிக்குடா  காவல் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த இராணுவ சிப்பாயை கைது செய்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply