இலங்கை பிரதான செய்திகள்

முக்கொம்பன் பூநகரி வீதி தற்காலிகமாக புனரமைப்பு.

கிளிநொச்சி பூநகரி முக்கொம்பன் கிராமத்திற்கும் ஸ்கந்தபுரம் கிராமத்திற்கும் இடையிலான வீதி தற்காலிகப் புனரமைப்பு மேற்கொண்டமைக்காக முக்கொம்பன் மக்கள் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏழாண்டுகளாக போக்குவரத்து மேற்கொள்ள முடியாத குன்றுங்குழியுமான வீதியில் பேருந்துகள் பயணிக்க வேண்டியிருந்ததாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மழை காலங்களில் குறித்த வீதி ஊடாக போக்குவரத்துகள் இடம்பெறாததன் காரணமாக பாடசாலைகள், மருத்துவமனைக்குச் செல்வதில் நெருக்கடி இருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால்  முக்கொம்பன் கிராமத்திற்கும் கிளிநொச்சி நகரத்திற்குமான தொடர்புகள் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் இந்நிலையில் தொடர்ச்சியாக மக்களாகிய நாம் விடுத்து வந்த கோரிக்கையினை கருத்தில் எடுத்து தற்காலிகப் புனரமைப்பினை மேற்கொண்டுள்ள அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கின்றோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வடமாகாண போக்குவரத்து அமைச்சு குறித்த வீதியினை நிரந்தரப் புனரமைப்பு மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முக்கொம்பன் மக்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி அக்கராயனில் இருந்து முக்கொம்பன் பூநகரி வழியாக யாழ்ப்பாணம் வரையும் பேருந்துகள்  பயணிப்பதற்கான சிறந்த வீதியொன்று தற்போது உருவாக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply