இலங்கை பிரதான செய்திகள்

273 விவசாயக் கிணறுகளை சீரமைக்க 100 விவசாயிகளுக்கு கொடுப்பனவு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்,

வடக்கு மாகாணத்தில் 273 விவசாயக் கிணறுகளைச் சீரமைப்பதற்காக 100 விவசாயிகளுக்கு காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டன. யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள விவசாயத் திணைக்களத்தில் இன்று மாலை இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண விவசாய அமைச்சால் இந்த நிதி வழங்கப்பட்டது.

இயக்கச்சியில் இயங்கும் பீற்றா பவர் ஜூல் பவர் நிறுவனத்தால் சமூகக் கடப்பாடு நன்கொடையாக வடக்கு மாகாண விவசாய அமைச்சுக்கு ஆண்டு தோறும் 20 மில்லியன் ரூபா நிதி வழங்கப்படுகிறது. இந்த நிதியிலிருந்தே வடக்கு மாகாணத்தில் 273 விவசாயக் கிணறுகளைச் சீரமைக்க 100 விவசாயிகளுக்குக் கொடுப்பனவு வழங்கப்பட்டது.

50 ஆயிரம் ரூபா தொடக்கம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவரை மதிப்பீட்டுக்கு அமைவாகக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன. வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம், ஜெயசேகரம், கஜதீபன், வடக்கி மாகாண விவசாயப் பணிப்பாளர் சிவகுமார் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்

Add Comment

Click here to post a comment

Leave a Reply