இலங்கை பிரதான செய்திகள் விளையாட்டு

வீரர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது – நிக் போதாஸ்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை அணியின் வீரர்களது பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என அணியின் பயிற்றுவிப்பாளர் நிக் போதாஸ் தெரிவித்துள்ளார். வளி மாசடைதல் காரணமாக இலங்கை அணி வீரர்கள் சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டிருந்ததென அவர் தெரிவித்துள்ளார்.  புதுடெல்லி பெரோசா கொட்லா மைதானத்தில் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி தற்பொழுது நடைபெற்று வருகின்றது.

இந்தப் போட்டியில் இலங்கை அணி வீரர்கள் வளி மாசடைதல் காரணமாக சுவாசப் பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்தனர்.
இது ஓர் புதிய நிலைமை எனவும், இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் நிக் போதாஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை அணி வீரர்கள் உரிய முறையில் போட்டியில் நடந்து கொள்ளவில்லை என இந்திய முன்னாள் வீரர்கள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply