இலங்கை பிரதான செய்திகள்

பொது மன்னிப்பு காலத்தில் சரணடையாத முன்னாள் படையினர் 2000 பேர் கைது


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பொது மன்னிப்பு காலத்தில் சரணடையாத முன்னாள் படையினர் 2019 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற மற்றும் முறையாக இராணுவத்திலிருந்து விலகாத 2019 பேரே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொசான் செனவிரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்ரோபர் மாதம் 23ம் திகதி முதல் நவம்பர் மாதம் 23ம் திகதி வரையில் வழங்கப்பட்ட பொதுமன்னிப்புக் காலத்தில் 11358 படையினர் இராணுவத்தில் சரணடைந்துள்ளனர். இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற 28000 படையினரை கைது செய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply