இந்தியா பிரதான செய்திகள் விளையாட்டு

அதிகரிப்புக்கு பின் விராட் கோலியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?


இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 6 மடங்குவரை உயரக்கூடும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளதன்படி அணித்;தலைவர் விராட் கோலியின் ஆண்டு சம்பளமாக 12 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கிடைக்கக்கூடும் என கருதப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்தும்படி விராட் கோலி, சிரேஸ்ட வீரர் தோனி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராயை சமீபத்தில் சந்தித்து கோரிக்கை வைத்திருந்தனர்.

சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, இந்திய வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்தும் இங்கிலாந்து, அவுஸ்திரேலிய வீரர்கள் சம்பளம் பெறும் விகிதம் குறித்தும் ஒப்பிட்டு விவாதம் நடைபெற்றது.

இதன்முடிவில் பிசிசிஐ நிர்வாகக்குழு, வீரர்களின் சம்பளம் உயர்த்தப்பட வேண்டும் என்பதை ஏகமனதாக ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகின்ற போதும் எந்தவித உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

தற்போதைய ஒப்பந்தத்தின்படி இந்திய கிரிக்கெட் வீரர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி ஏ கிரேட் வீரர்களுக்கு 2 கோடி ரூபாயும், பி கிரேட் வீரர்களுக்கு 1 கோடி ரூபாயும, சி கிரேட் வீரர்களுக்கு 50 லட்சம் ரூபாயும்வழங்கப்பட்டு வருகிறது. இந்த சம்பள ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்துள்ளநிலையில் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply