இலங்கை பிரதான செய்திகள்

வடமாகாணத்தின் 2018ம் ஆண்டிற்கான நிதிக்கூற்று நியதிச்சட்ட அறிக்கை முன்மொழியப்பட்டது:-

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

2018ம் ஆண்டிற்கான வடமாகாணத்தின் ஒதுக்கீட்டு நியதிச்சட்ட அறிக்கை இன்று வடமாகாணசபையில் முததலமைச்சரினால் முன்மொழியப்பட்டது. வடமாகாணசபையின் நூற்றி பதினொராவது அமர்வு இன்று கைதடியிலுள்ள பேரவைச்செயலகத்தில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது இதன்போது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடமாகாணத்தின் 2018ம் ஆண்டிற்கான நிதிக்கூற்று நியதிச்சட்ட அறிக்யிகைனை சபையில் முன்மொழிந்தார்

மத்திய அரசாங்கத்தினால் வடமாகாணத்திற்கென பாதீட்டில் ஒதுக்கப்பட்டுள்ள இருபத்தாறாயிரத்து எழுநூற்று ஐம்பத்திநான்கு மில்லியன் அறுபத்தாறாயிரம் ரூபா நிதியினை அவையில் முன்மொழிந்த முதலமைச்சர் அதற்கான எல்லைகள் தொடர்பிலும் சழபயில் தெரிபுபடுத்தினார்-குரல்- இதன் மீதான அமைச்சுக்களின் விவாதம் எதிர்வரும் 12ம் 13ம் மற்றும் பதினடநான்காம் திகதி இடம்பெறும் என அவைத்தலைவரினால் தெரிவிக்கப்பட்டது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply