உலகம் பிரதான செய்திகள்

கடமைகளை செய்ய மறுத்த ஹொண்டுராஸ் காவல்துறையினர்


குளோபல் தமிழ்ச்  செய்தியாளர்

ஹொண்டுராஸ் காவல்துறையினர் தமது கடமைகளை செய்ய மறுத்து வருகின்றனர். ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டு ஹொண்டுராஸ் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டங்களில் பங்கேற்பவர்களை தடுத்து நிறுத்த, ஹொண்டுராஸ் காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனினும் கோப்ராஸ் என அழைக்கப்படும் ஹொண்டுராஸின் கலகத் தடுப்புக் காவல்துறையினர் கடமைகளிலிருந்து விலகிக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

போராட்டக்காரர்களின் போராட்டங்களை தடுத்து நிறுத்தாது அவர்களுக்கு ஆதரவான வகையில் காவல்துறையினர் மௌனம் காத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. போராட்டங்களின் போது குறைந்தபட்சம் மூன்று பேர் வரையில் கொல்லப்பட்டிருந்தனர். தற்போதைய ஜனாதிபதி ஜுவான் ஒர்லாண்டோ ஹெர்னாண்டஸ்  (Juan Orlando Hernández )  தேர்தலில் வெற்றியீட்டியுள்ளதாக அந்நாட்டு தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும் இந்த தேர்தல் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply