இலங்கை பிரதான செய்திகள்

EPRLF,TELO சந்திப்பு – தமிழரசுக் கட்சியுடன் கோபம்? TNAயில் இருந்து வெளியேற்றம்?

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிலிருந்து தாம் பிரிந்து செயற்படப்போவதாக அறிவித்துள்ள பங்காளிக்கட்சியான ரெலோ அமைப்பினர் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மற்ரொரு பங்காளிக்கட்சியான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிறேமச்சந்திரனை காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் நீர்வேலியில் அமைந்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் கட்சி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

ரெலோ அமைப்பின் சார்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம்,கிழக்கு மாகாண முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கருணாகரம் ஜெனா,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம்,கிழக்கு மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

சந்திப்பில் உதய சூரியன் சின்னத்தில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரிவாக ஆராயப்பட்டள்ளது. இன்று மாலைக்குள் ரெலோ கட்சி தனது இறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கும் என்றும் தமது கட்சி இனிவருங்காலங்களில் தமிழரசுக்கட்சியுடன் இணைந்து செயற்படாது என்றும் ரெலோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply