இந்தியா பிரதான செய்திகள்

புயலால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் – உயர்நீதிமன்றம்:-

புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றில் மீனவர்கள் பாதுகாப்பு அமைப்பின் தலைவரான பீட்டர் ராயன் தாக்கல் செய்துள்ள மனுவில், ஒகி புயலால் கடலுக்குள் காணாமல்போன மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும் எனவும் இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார். அதேவேளை புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு அடிப்படை வசதிகளை செய்துதர அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சட்டத்தரணி சூரியபிரகாசம் என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தநிலையில் ஒகி புயலால் கடலுக்குள் காணாமல்போன மீனவர்களை கண்டுபிடிக்க கடலோர காவல்படையும், கடற்படையும் தீவிர தேடுதல் நடத்த வேண்டும் எனவும’ புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை சரியாக அடையாளம் கண்டு, அவர்களுக்கு தேவையான உணவு, உடை, உறைவிடம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் உடனடியாக செய்துகொடுக்க வேண்டும் எனவும் நீதிமனற்ம் உத்தரவிட்டுள்ளது

2015-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு பணிகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக செய்யவேண்டும் எனவும் நீதிமனற்ம் உத்தரவிட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply