இலங்கை பிரதான செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை வெளிப்படுத்த கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

 
குளோபல் தமிழ்  செய்தியாளர்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை வெளிப்படுத்த கோரியும் , சிறையில் உள்ள அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என கோரியும் யாழில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்க ப்பட்டது.  யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக மதியம் 12.30 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முன்னிலை சோஷலிச கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply