இலங்கை பிரதான செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மட்டக்களப்பு நாசிவன்தீவு மாணவன் ஜனாதிபதியைச் சந்தித்துள்ளார் :

sanujan

80 ஆண்டுகள் பழமைவாய்ந்த மட்டக்களப்பு நாசிவன்தீவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வரலாற்றில் முதற்தடவையாக புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்ந திலீப்குமார் சனூஜன் எனும் மாணவர் இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதியைச் சந்திக்க வேண்டுமென்ற அவரது விருப்பத்தை நிறைவேற்றிய இச் சந்திப்பில் மாணவர் திலீப்குமாருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து பரிசில்களையும் ஜனாதிபதி அவர்கள் வழங்கியுள்ளார்.

பாடசாலை அதிபர் ரி.ஜெயபிரதீபன், வகுப்பாசிரியர் ஏ.மோகன்ராஜ், மாணவனின் பெற்றோர் ஆகியோர் இச்சந்திப்பில் பங்குபற்றினார்கள்.

அதேவேளை 2016 ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்தோரின் அடைவு மட்டத்தின் அடிப்படையில் தேசிய ரீதியில் முதலாமிடத்தைப் பெற்ற குருணாகல், மாகோ கல்வி வலயத்துக்குரிய கல்கமுவ எரியாவ கனிஷ்ட வித்தியாலய மாணவர்களும் ஜனாதிபதி செயலகத்தில்  ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *