பிரதான செய்திகள் விளையாட்டு

மேற்கிந்திய தீவுகளின் முக்கிய வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுப்பு

west-indies
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

மேற்கிந்திய தீவுகள் அணியின் முக்கிய வீரர்கள் சிலர் ஒப்பந்ததத்தில் கைச்சாத்திட மறுப்பு வெளியிட்டுள்ளனர். 2016-2017ம் ஆண்டுக்கான மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் வாரியத்தின் மத்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை என சில வீரர்கள் அறிவித்துள்ளனர்.

மார்லன் சமுவெல்ஸ், டெரன் பிராவோ மற்றும் கார்லோஸ் பரத்வயீ ஆகியோரே இவ்வாறு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுத்துள்ளனர். என்ன காரணத்திற்காக அவர்கள் இவ்வாறு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. இதேவேளை, தினேஸ் ராம்டீன், கிமர் ரோச் போன்ற சில வீரர்கள் மத்திய ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *