இந்தியா பிரதான செய்திகள்

பனிப்புகைக்குள் இந்தியத் தலைநகரம் டெல்லி

 குளோபல் தமிழ் செய்தியாளர்
delhigo_122255

கடந்த சில நாட்களாக இந்தியாவின் தலைநகர் டெல்லியை பனிப் புகை சூழ்ந்து காணப்படுகின்றது. கட்டடங்கள், வாகனங்கள் பனிமூட்டத்தினால் மூடப்பட்டுக் காட்சி அளிக்கின்றன. இதனால் இயல்பு வாழ்வில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.உலகளவில் மிக மோசமான காற்று தரம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளதாக உலக காற்று மாசு தரவுகள் தெரிவித்துள்ளன. தீபாவளிப் பண்டிகையை தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக வட இந்திய பகுதிகளில் காற்று மாசு அதிகம் காணப்படுவதாக இந்திய சுற்றுச்சூழல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் இன்றும் அதிகாலை டெல்லியில் பனிப்புகை சூழ்ந்து காட்சியளித்தது. டெல்லியின் காற்று தரம் மிக மோசமான அளவை எட்டி வருவதால் அங்கு வசிக்கும் மக்கள் அசுத்த காற்றை சுவாசித்து வருவதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *