இலங்கை பிரதான செய்திகள்

ஓமந்தையில், கடனை திருப்பி செலுத்த முடியாததால் குழந்தையுடன் தாய் தற்கொலை

omanthai

வவுனியா ஓமந்தை புதிய வேலர் சின்னக்குளத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் இரண்டரை வயதுடைய ஆண் குழந்தையுடன் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

நுண்கருத்திட்டம் எனப்படும் நுண்கடன் திட்டத்தின் கீழ் நிதி நிறுவனம் ஒன்றிடமிருந்து பெற்ற கடனைத் தவணை முறையில் திருப்பிச் செலுத்துவதில் கணவனுடன் ஏற்பட்ட வாய்த் தகராறை அடுத்து இந்த அசம்பாவிதம் நேர்ந்திருப்பதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்று புதன்கிழமை வீட்டைவிட்டு தனது இரண்டாவது ஆண்குழந்தையுடன் வெளியில் சென்ற இந்தப் பெண் வீடு திரும்பாததையடுத்து, அவருடைய கணவனும் உறவினர்களும் தேடியபோது இன்று காலை அவர் கிணற்றில் குழந்தையுடன் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டிருக்கின்றது.

 

இறந்தவர்களின் உறவினர்கள்

அயல் கிராமமாகிய பன்றிக்கெய்தகுளத்தில் பாவனையற்ற கிணறு ஒன்றில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. இறந்தவர்கள் நாகநாதன் சுகந்தினியும், அவருடைய மகனான நாகநாதன் கிந்துஜன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து பின்னர் சொந்தக் கிராமங்களில் மீள்குடியேறியுள்ள பல குடும்பங்கள் அவர்களுக்கேற்ற வாழ்வாதார உதவிகள் கிடைக்காத காரணத்தினால் நுண்கருத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற நுண்கடன் உதவிகளைப் பெற்று வருகின்றனர்.

இறந்தவர்களின் உறவினர்கள்

ஆயினும் அந்த உதவிகளின் மூலம் போதிய வருவாய் இல்லாத காரணத்தினால் அவர்கள் பெற்ற கடனை உரிய தவணையில் திருப்பிச் செலுத்துவதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக இந்தச் சம்பவம் நடைபெற்ற இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்துத் திரும்பியுள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து ஓமந்தை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

BBC

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *