உலகம் பிரதான செய்திகள்

லிபியாவின் கடற்பரப்பில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 240 அகதிகள் பலி

A member of Maltese NGO MOAS helps a woman to board a small rescue boat during a rescue operation of migrants and refugees by the Topaz Responder ship run by Maltese NGO Moas and the Italian Red Cross, on November 3, 2016 during a rescue operation, off the Libyan coast in the Mediterranean Sea. / AFP PHOTO / ANDREAS SOLARO

லிபியாவின் கடற்பரப்பில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 240 அகதிகள் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேற்கு ஆபிரிக்காவில் இருந்து 2 ரப்பர் படகுகளில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 300 அகதிகள் இத்தாலியை நோக்கி புறப்பட்ட நிலையில்  லிபியாவின் மெரிட்டேரின் கடல் பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக 2 படகுகளும் நிலை தடுமாறி கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தகவல் அறிந்த இத்தாலிய கடற்படையினர் 5 கப்பல்களில் சம்பவ இடத்திற்கு  விரைவாக சென்ற போதும் 240 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.  27 பேர் மட்டும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் ஏனையோரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

libia2

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *