இலங்கை பிரதான செய்திகள்

வடக்குத் தலைவர்கள் தெற்கு பற்றியும் சிந்திக்க வேண்டும் – ரெஜினோல்ட் குரே

குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு

வடக்குத் தலைவர்கள் தெற்கு பற்றியும் சிந்திக்க வேண்டுமென வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
வடக்குத் தலைவர்கள் வடக்கு பிரச்சினைகள் மட்டுமreginold-coorayன்றி தெற்கின் பிரச்சினைகள் பற்றியும் கரிசனை காட்ட வேண்டுமெனவும் அநேகமான அரசியல்வாதிகள் மக்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தி விரைவில் அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்ள முனைவதாகவும் தெரிவித்துள்ளார்.

வடக்கின் ஹாவா குழு போன்று தெற்கிலும் பல்வேறு பாதாள உலகக்குழுக்கள் இயங்கி வருவதாகவும் அவற்றின் பெயர்கள் வேறு வேறு என்ற போதிலும் நோக்கம் ஒன்றேதான் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஹாவா குழுவின் பின்னணியில் படையினர் இருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையிருக்க வாய்ப்பில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

1 Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

  • வடக்கின் ஹாவா குழு போன்று தெற்கிலும் பல்வேறு பாதாள உலகக்குழுக்கள் இயங்கி வருவதாகவும் அவற்றின் பெயர்கள் வேறு வேறு என்ற போதிலும் நோக்கம் ஒன்றேதான் எனக் குறிப்பிட்டுள்ள வடமாகாண ஆளுநர் திரு. ரெஜினோல்ட் கூரே, ஹாவா குழுவின் பின்னணியில் படையினர் இருப்பதாக சுமத்தப்படும் குற்றச்-சாட்டுக்களில் உண்மையிருக்க வாய்ப்பில்லை, என்று முரண்பட்ட கருத்தைக் கூறியிருக்கின்றார்! தெற்கில் இயங்கும் பாதாளக் குழுக்களைப் பின்னின்று இயக்குபவர்கள் அரசியல்வாதிகள்தான் என்பதில் இரகசியமில்லை! இதைத் தெற்கு அரசியல்வாதிகளும், ஊடகங்களும் பல தடவைகள் ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளன! மேலும், இது போன்ற அமைப்புக்கள் போரின் இறுதி நாட்களிலும், போரின் பின்னருமே வடக்கு கிழக்கில் இயங்குகின்றன, என்பதும் இரகசியமில்லை?அது மட்டுமன்றி, ஆவாக் குழு இராணுவத்தினராலேயே இயக்கப்படுகின்றதென்பதைப் பல தெற்கு அரசியல்வாதிகளும் கூறியிருக்கையில், இவர் புதிதாக மாறுபட்ட கருத்தை முன்வைப்பதன் இரகசியமென்ன?

    வடக்கு ஆளுநராகப் பதவியேற்ற நாளில் இருந்து இதுவரை தீவிர அரசியல் கருத்துக்கள் எதனையும் முன்வைக்காத இவர், இப்பொழுது மட்டும் இவ்வளவு தீர்க்கமாக, ஒரு ஆளுனருக்குச் சம்பந்தமில்லாத, ‘தேசிய பாதுகாப்பு மற்றும் இராணுவக் கரிசனம்’, குறித்துக் கருத்துக் கூற முற்படுவது, ஜனாதிபதியின் அண்மைய வடக்கு விஜயத்தின் பின்பே, என்பது கவனத்துக்குரியது! தேசிய பாதுகாப்பு மற்றும் இராணுவம் போன்றவை மாகாண சபைக்கு அப்பாற்பட்டவை என்பதால், அது குறித்து அக்கறை கொள்ள வேண்டிய தேவை ஒரு மாகாண ஆளுநருக்கு இல்லையே?

    எந்தவொரு தமிழரும் வடக்கில் இருந்து முற்றாக இராணுவத்தை வெளியேற்றும்படி கூறவில்லையே? மக்கள் வாழ்விடங்களில் செறிந்திருக்கும் இராணுவத்தையும், நாளாந்த வாழ்வில் அதன் அனாவசியத் தலையீடுகளையும் மட்டுமே அவர்கள் எதிர்க்கின்றார்கள்? வடக்கில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் அதே தலையீடுகளை,(அனர்த்த நிலைமைகளைத் தவிர) தெற்கில் எங்காவது ஒரு பகுதியில்தானும் இராணுவத்தினர் செய்கின்றார்களென இவரால் நிரூபிக்க முடியுமா? தேசிய பாதுகாப்பு என்பது, உள்நாட்டுப் போர் எதுவும் அற்றதொரு நிலையில், நாட்டின் எல்லைகளில் மட்டுமே இருக்க வேண்டும்? உள்ளகப் பாதுகாப்புக்குத்தான் போலீசார் இருக்கின்றார்களே! அவர்களைக் கூடச் சில அரசியல்வாதிகள் தவறாகப் பயன்படுத்தியபோது, அதைக் கூடக் கண்டிக்கும் வல்லமையற்று இருந்த வடக்கு ஆளுநர், புதிதாக வேதம் ஓதுகின்றார்?

    வடக்கு- கிழக்கில் இராணுவத்தினரை வெளியேற்றினால், அதே கோரிக்கையைத் தெற்கு மக்களும் முன்வைப்பார்களாம்? இதை விட முட்டாள்தனம் வேறெதுவும் இருக்க முடியாது! இலங்கையின் மொத்த ராணுவ எண்ணிக்கையே ஏறக்குறைய 2 லட்சம்தான்! அதில் 1 லட்சம் வரையானோர் மிகச் சிறிய பரப்பளவில்/ வடக்கில் நிலை கொண்டிருக்கின்றார்கள்? நிலைமை இவ்வாறிருக்க, வேறு எவர் இராணுவ வெளியேற்றம் குறித்துக் கோரிக்கை வைப்பார்களோ, அவருக்கே வெளிச்சம்? சகல மாகாணங்களுக்கு விகிதாசார ரீதியில் இராணுவம் நிலைநிறுத்தப்படுமானால், இப்படியொரு கோரிக்கையை யாரும் முன்வைக்கப்போவதில்லை!

    ‘பதவி சுகம்’, பறிபோய்விடக் கூடாது’, என்ற ஆர்ப்பரிப்பாகவே இது தெரிகின்றது? எமது முதல்வருக்குப் பாடம் எடுப்பதை விடுத்துச் சற்றுச் சிரத்தையுடன், வடக்கு மக்கள் குறித்தும் சிந்திப்பாரா?