இலங்கை பிரதான செய்திகள்

எவ்வாறு செய்தி அறிக்கையிட வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்த புதிய குழு நியமனம்?

gayantha-karunathilaka
குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு

எவ்வாறு செய்தி அறிக்கையிடப்பட வேண்டுமென்பது குறித்து அறிவுறுத்த புதிய குழுவொன்று நியமிக்கப்பட உள்ளது. இலத்திரனியல் ஊடகங்கள் செய்தி அறிக்கையிடும் போது எவ்வாறு செயற்பட வேண்டுமென்பது குறித்து இந்த புதிய குழு பரிந்துரைகளை செய்யும் என ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் முழு அளவில் ஊடக சுதந்திரத்தை வழங்கியுள்ளதாகவும் எனவே, ஊடகங்கள் ஒழுக்க விதிகளைப் பின்பற்றி செய்தி அறிக்கையிட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். சிறுவர்கள் தொடர்பில் செய்தி அறிக்கையிடும் போது அவர்களின் எதிர்காலத்தை பாதிக்காத வகையில் செய்தி அறிக்கையிடப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *