இலங்கை பிரதான செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட யாழ் பல்கலை மாணவர்களின் குடும்பத்தினரை சந்தித்தார் எதிர்கட்சி தலைவர்

dsc_0127

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி

இன்று பிற்பகல்  படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவன்  நடராசா கஜனின்    இல்லத்திற்கு எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் சென்று அவர்களின் குடும்ப நிலவரங்களை பார்வையிட்டதுடன் குடும்பத்தாருக்கு ஆறுதல் வார்த்தைகளையும் கூறியுள்ளார் .

இதன்போது கருத்துத் தெரிவித்த எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தன்  நீதி கோரி விசாரணைகள் ஒரு பக்கத்தில் நடந்துகொண்டிருக்க இந்த படுகொலையில் இறந்த மாணவர்கள் இக் குடும்பங்களுக்கு முக்கியமானவர்கள். இவர்களின் இழப்பு ஒரு பெரிய இழப்பு  இந்த இரு குடும்பகளினதும்  பொருளாதார நிலைமைகளைக் கருத்திற் கொண்டு இவர்களுக்கு பொருளாதார ரீதியில் உதவுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சி .சிறிதரன் மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிளை ஆகியோரும்  கலந்துக்கொண்டுள்ளார்.

dsc_0134

அதேவேளை  எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சரவணபவன் ஆகியோர் கந்தோரோடையில் உள்ள படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவன்  சுலக்ஷனின்  வீட்டிற்கும் நேரில்  சென்று துக்கம் விசாரித்துள்ளனர்.

img_3472

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *