இலங்கை பிரதான செய்திகள்

சமஸ்டியுடன் , சுயாட்சி கூடிய அரசியலமைப்பே தேவை. – சி.வி. விக்னேஸ்வரன்

canada

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்

எமக்கு சமஷ்டியுடன் கூடிய அரசியல் யாப்புத் தேவை. அது  எமக்கு ஒரு விதத்தில் சுயாட்சியை தரும் வகையில் அமைய வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.  யாழிற்கு விஜயம் மேற்கொண்ட கனடாவின் உயர் அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை வடமாகாண முதலமைச்சரை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.  அக் கலந்துரையாடல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

கணவரை இழந்த பெண்கள்  மற்றும் முன்னாள் போராளிகள், தாய் தந்தையை இழந்த சிறுவர்கள் குறித்து எந்தவிதமான செயற்திட்டங்களை அமைக்கப்பட வேண்டும் என கலந்துரையாடி இருந்தோம். எந்தவிதமாக உதவிகளை செய்ய வேண்டுமென்று ஆராய்ந்து சென்றுள்ளார்கள். எமக்கு சமஷ்டியுடன் கூடிய அரசியல் யாப்புத் தேவை.அது எமக்கு ஒரு விதத்தில் சுயாட்சியை தரும் வகையில் அந்த அரசியல் யாப்பு அமைய வேண்டுமென்று கூறினேன் என மேலும் அவர் தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *