இலங்கை பிரதான செய்திகள்

நான் இருந்தால் படைவீரர்களை தாக்க அனுமதித்திருக்க மாட்டேன் – ஜனாதிபதி

Maithiri Bala_CI
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

தாம் இருந்திருந்தால் படைவீரர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதித்திருக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் பல்வேறு நெருக்கடிகள் காணப்படுவதாகவும் இவை அனைத்தையும் வெளிப்படையாக கூற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். தாம் கொழும்பில் இருந்திருந்தால் ஓய்வு பெற்ற படைவீரர்கள் மீது நீர்த்தாரை தாக்குதல் நடத்தியிருக்க அனுமதித்திருக்க மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

ஊனமுற்றபடைவீரர்களின் பிரச்சினை கடந்த எட்டு ஆண்டுகளாக நீடித்து வருவதாகவும், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து நான்கு மாதங்களுக்கு முன்னதாக பேசப்பட்டதாகவும்இது குறித்து அறிவிக்கப்பட்ட நிலையில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். படைவீரர்களின் போராட்டத்தின் பின்னணியில் அரசியல் சக்தியொன்று இயங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

1 Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

  • நான் கொழும்பில் இருந்திருந்தால் ஓய்வு பெற்ற படைவீரர்கள் மீது நீர்த்தாரை தாக்குதல் நடத்தியிருக்க அனுமதித்திருக்க மாட்டேன் எனக் குறிப் பொறுப்புக் கூறலில் இருந்து தப்பித்துக்கொள்ள முயற்சிக்கும் ஒரு அறிக்கையாகவே இவரது அறிக்கை காணப்படுகின்றது?thoru இப்படியான ஒரு அறிக்கையை வெளியிட்டதன் மூலம், தன்னைத் தானே தரம் தாழ்த்திக் கொண்டதோடல்லாமல், தனது ஆளுமை அற்ற தன்மையையும் பறைசாற்றியிருக்கின்றார், என்றே கூற வேண்டும்?

    பொது மக்களின் நாளாந்த வாழ்வுக்கு இடையூறாக அமையும் எந்தவொரு ஆர்ப்பாட்டம், ஊர்வலம் மற்றும் உண்ணாவிரதம் போன்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தப் பாதுகாப்புப் பிரிவினர் பிரயோகிக்கும் மிக வலுக்குறைந்ததொரு நடவடிக்கை உண்டென்றால் அது, ‘நீர்த்த தாரை மற்றும் கண்ணீர்க் குண்டுத்தாக்குதல்’, என்பதுதான்! இது போன்ற நடவடிக்கைகள் சர்வதேச நாடுகள் எங்குமே பயன்படுத்தப்படுவதுதானே! போரில் பாதிப்புற்ற இராணுவத்தினரின், குறித்த நடவடிக்கைக்குப் பின்னால் அரசியல் சூழ்ச்சித் திட்டம் ஒன்றிருப்பதை ஏற்றுக்கொள்ளும் ஜனாதிபதி, நீர்த் தாரைப் பிரயோகத்தைப் பெரிசுபடுத்துவது, அவரின் ஆளுமையின்னையையே காட்டுகின்றது!?

    அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் பல்வேறு நெருக்கடிகள் காணப்படுவதென்பதனை யாரும் மறுக்கவில்லை! ஆனால், அப்படியானதொரு நிலைமையை நாட்டில் உருவாக்கியவரும் இவரேயென்பதனையும் மறுக்க முடியாது! நாட்டில் குழப்பம் விளைவிப்பவர்களுக்கு எதிராகப் பதவிக்கு வந்த ஆரம்ப நாட்களிலேயே மிகத் தீர்க்கமான/ கடுமையான முடிவுகளை எடுத்திருப்பாரானால், நாடு இன்று இது போன்ற நெருக்கடிகளை சந்தித்திருக்காது? சாம, பேத, தானம் என்றால் என்னவென்றே தெரியாத ராஜபக்ஷர்களின் ஆட்சிக் காலத்தின் பின், அவற்றைப் பிரயோகிப்பதன் மூலம் நல்லாட்சித் தத்துவத்தை நிறுவ முடியுமென நம்பிய ஜனாதிபதிக்கு, வருங்காலங்களில் முகம்கொடுக்க இருக்கும் நெருக்கடிகளில் இருந்து மீள்வதென்பது, சவால்கள் நிறைந்ததொன்றென்பதை மறுப்பதற்கில்லை!

    காலம் கடந்து விடவில்லை! உரிய விதத்தில் உரியவர்களுக்கு எதிராகச் சரியான நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம், நாட்டை நல்வழிக்கு இட்டுச் செல்ல முடியும்? பச்சாத்தாப அறிக்கைகள் விடுவதை விடுத்துத் துணிந்து செயற்படுவாரானால், நாடு போற்றும் ஒரு உன்னதத் தலைவராக மிளிர முடியும்! சிந்திப்பாரா?