இலங்கை பிரதான செய்திகள்

சங்கரத்தையில் வாள் வெட்டு. இருவர் படுகாயம்.

jaff news round up_CI
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்
யாழ்.சங்கரத்தை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்திற்கு இலக்காகி இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். சங்கரத்தை பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் குறித்த வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றது.
சம்பவம் குறித்து தெரிய வருவதாவது,
வேலைக்கு சென்ற இரு இளைஞர்களும் துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக்கொண்டு இருந்த வேளை சங்கரத்தை பகுதியில் வைத்து இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் அவர்கள் மீது வாள்   வெட்டினை மேற்கொண்டு உள்ளனர். வாள் வெட்டுக்கு இலக்கான இளைஞர்கள் இருவரும் காயமடைந்த நிலையில் சிகிசைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *