இலங்கை பிரதான செய்திகள்

ஹாவா குழு என்ற அடிப்படையில் இராணுவப் படையினர் எவரும் கைதாகவில்லை

roshanseniviratne_1
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

ஹாவா குழு என்ற அடிப்படையில் இராணுவப் படையினர் எவரும் கைதாகவில்லை என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இராணுவப் படையில் கடமையாற்றி வரும் எவரும் ஹாவா குழுவுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படவில்லை எனவும் அவ்வாறு ஏதேனும் கைதுகள் இடம்பெற்றிருந்தால் குறித்த முகாமின் ஊடாக அறிவிக்கப்பட்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் இதுவரையில் அவ்வாறு எவ்வித அறிவிப்புக்களும் விடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *