இந்தியா பிரதான செய்திகள்

இந்தியாவில் புதிய ஆயிரம் ரூபாய் தாள்கள் இன்னும் சில மாதங்களில் :

sakthi
புதிய ஆயிரம் ரூபாய் தாள்கள் இன்னும் சில மாதங்களில் புழக்கத்திற்கு விடப்படும் என்று இந்திய மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் இன்று அறிவித்துள்ளார்.  கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் தாள்கள்கள் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.  இதையடுத்து புதிதாக 500 மற்றும் 2000 ரூபாய் தாள்கள் அறிமுகம் செய்யப்பட்டு இன்று முதல் வங்கிகள் வாயிலாகவும், நாளை முதல் ஏடிஎம்கள் மூலமாகவும் மக்களுக்கு வழங்கப்படவுள்ளன.

இந்த நிலையில், மீண்டும் ஆயிரம் ரூபாய் தாள்களை வெளியிட உள்ளதாக மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார்.  இந்த புதிய ஆயிரம் ரூபாய் தாள்கள் அளவிலும், வண்ணத்திலும் வேறுபட்டிருக்கும் என்றும், இன்னும் சில மாதங்களில் அந்த ரூபாய் தாள்கள புழக்கத்திற்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும்  இந்த தாள்கள பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் கொண்டவையாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *