இலங்கை பிரதான செய்திகள்

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதிக்கெதிராக போராட்டங்கள் தொடர்கின்றன :

pikku

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் உள்ள கிராமசேவை உத்தியோகத்தர்கள் இன்று ஒரு மணி நேர பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் கால்நடைகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள மேய்ச்சல் நிலத்தை மங்களராமய விஹாரையின்  தேரர் கைப்பற்ற முனைந்த வேளை பிரதேச மக்கள் சார்பாக  அவரிடம்  விளக்கம் கோரிய  கிராம சேவகரை குறித்த பிக்கு முறையற்ற விதத்தில் இனத்துவேச பேசி  அநாகரீகமாக நடந்துகொண்டிருந்தமைக்கெதிராகவே இன்றையதினம் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

குறித்த தேரரை உடனடியாக மாவட்டத்தை விட்டு வெளியேற்றுமாறும், இந்நடவடிக்கை தொடர்பாக மன்னிப்பு கேட்காவிட்டால் தமது பணிப் பகிஸ்கரிப்பு போராட்டம்; தொடருமெனவும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *