இலங்கை பிரதான செய்திகள்

மருதங்கேணி மாமுனை ஏரியில் 4,50,000 மீன்குஞ்சுகள் வைப்பிலிடப்பட்டது

15027398_10210966107497800_7077535691895094359_n1

வடக்குமாகாணத்தில் உள்ள நன்னீர் மீன்பிடி சங்கங்களை வாழ்வாதாரத்தில் ஊக்குவிக்கும் திட்டத்திற்கு அமைவாக, ஏற்க்கனவே மாகாணத்தில் உள்ள பல நன்னீர் மீன்பிடி சங்கங்களுக்கு அவர்களது குளங்களில் நன்னீர் மீன்குஞ்சுகளை வைப்பிலிட்டுக்கொடுக்கப்பட்டுள்ளமை யாவரும் அறிந்ததே, அதனடிப்படையில் வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள மருதங்கேணி பிரதேச செயலகத்துக்குட்பட்ட மாமுனை ஏரியில் மீன்குஞ்சுகள் வைப்பிலிடும் நிகழ்வு இன்று (16-11-2016) மதியம் 1 மணியளவில் நடைபெற்றது.

வடமாகாண மீன்பிடி அமைச்சின் 2016ம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்து (PSDG) ரூபா ஒரு மில்லியன் பெறுமதியான 4,50,000 மீன்குஞ்சுகள் கொள்வனவு செய்யப்பட்டு குறித்த ஏரியில் வைப்பிலிடப்பட்டுள்ளது.

15085745_10210966084137216_2094895382339130362_n1

இவ் ஏரியில் சுமார் 120 இற்கு அதிகமான குடும்பங்கள் வாழ்வாதார தொழிலாக மீன்பிடியில் ஈடுபட்டு வருவதுடன் அவர்கள் தற்பொழுது நாளந்த நிகர வருமானமாக ரூபா. 1500 – 2000  வரை பெற்றுவருவதாக தெரிவித்தனர். மேலும் தற்பொழுது அமைச்சர் அவர்களினால் வைப்பிலிடப்பட்ட மீன்குஞ்சுகள் மூலம் இன்னும் ஆறுமாத காலப்பகுதியில் தமது வருமானத்தை பன்மடங்கு பெருக்கமுடியுமென நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

குறித்த நிகழ்வானது மருதங்கேணி பிரதேச செயலகத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருத்ததுடன் மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களுடன் இலங்கை தேசிய நீர் உயிரினவளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட பொறுப்பதிகாரி சலீபன், பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர், கிராமசேவகர்கள், பிரதேச செயலக அலுவலர்கள், மீனவ சங்கத்தின் நிருவாக உறுப்பினர்கள் மற்றும் குறித்தபகுதி கிராமமட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்

15134658_10210966080657129_7568958933966655865_n1

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *