இலங்கை பிரதான செய்திகள்

சீனா விஜயம் செய்யும் மஹிந்தவிற்கு சகல வசதிகளையும் ராஜதந்திர ரீதியில் வழங்குமாறு ரணில் உத்தரவு

Ranil Mahinda_CI
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சீனாவிற்கு விஜயம் செய்யும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு, ராஜதந்திர ரீதியில் சகல வசதிகளையும் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளிவிவகார அமைச்சிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எவ்வித குறையும் இன்றி முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு சீன விஜயத்திற்கான சகல வசதிகளையும் செய்து கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். சீன அரசாங்கத்தின் அழைப்பிற்கு அமைய  எதிர்வரும் 23ம் திகதி மஹிந்த ராஜபக்ஸ சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *