உலகம் பிரதான செய்திகள்

மொசாம்பிக்கில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற கொள்கலன் லொரி தீப்பிடித்ததில் 73 பேர் உயிரிழந்துள்ளனர்

mosambic
மொசாம்பிக்கின் மேற்கு பகுதியில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற கொள்கலன் லொரி தீப்பிடித்ததில் 73 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மொசாம்பிக்கின் டெடி என்ற  நகரில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற  கொள்கலன் லொரியிலிருந்து  பெட்ரோலை எடுக்க பொதுமக்கள் முயன்ற வேளை  அதிக வெப்பத்தினால்  லொறி தீப்பற்றி எரிந்ததாகவும்  இதில்  குழந்தைகள் உட்பட பொதுமக்கள் 73 பேர் உயிரிழந்ததுடன் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் மொசாம்பிக் அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைகிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *