இலங்கை பிரதான செய்திகள்

காணி ஆணையாளர் பணி நீக்கப்பட உள்ளார்

rpr-rajapaksha
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

காணி ஆணையாளர் ஆர்.பி.ஆர். ராஜபக்ஸவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய காணி ஆணையாளர் தமது பணிகளை உரிய முறையில் மேற்கொள்ளவில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் காணித் திணைக்களத்திற்கு சென்ற போது அவர்களை உதாசீனம் செய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே காணி ஆணையாளரின் நடவடிக்கைகள் குறித்து குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பொதுமக்களினால் செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையிலும் காணி ஆணையாளர் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில்  காணி ஆணையாளர் பணி நீக்கப்பட உள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts