உலகம் பிரதான செய்திகள்

டிரம்பை மோசமானவராக கருத வேண்டாம் – ஒபாமா

obama
அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப்புக்கு தகுதி இல்லை என தவறாக எண்ண  வேண்டாம் எனவும் டிரம்ப்பை மோசமானவராக கருத வேண்டாம் எனவும் ஒபாமா தெரிவித்துள்ளார்

டிரம்ப் எவ்வாறு நிர்வாகம் நடத்துகிறார் என்பதை காத்திருந்து பார்க்குமாறும் உலக நாடுகள் அமைதியுடன்  செழிப்பாக ஒற்றுமையாக வாழும் வகையில் அவரது  நிர்வாகம் இருக்கிறதா என்பனை  இவரது ஆட்சியை பார்த்த பின்னர் தீர்மானியுங்கள் என ஒபாமா தெரிவித்துள்ளார்.  டிரம்ப்  குறித்து உலக நாடுகள் உடனடியாக எந்த முடிவுக்கும் வர வேண்டாம் எனவும்  இது உலக நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு முக்கியமானதாகும் எனவும் அவர் குறிப்பட்டுள்ளளார்.

தென்னமொிக்காவின் பெரு நாட்டில் நடைபெறும் ஆசிய பசுபிக் பொருளாதார மகாநாட்டில் இளைஞர்களுடன் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியிலேயே  ஒபாமா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *