இலங்கை பிரதான செய்திகள்

நீதி அமைச்சரின் கருத்து முஸ்லிம்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது – ஹக்கீம்

Hakeem_CI
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவின் கருத்து முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமன ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் கடும்போக்குவாதிகள் இலங்கையில் பிரவேசித்துள்ளதாகவும் பயங்கரவாதத்தை கற்பிப்பதாகவும் நீதி அமைச்சர் எதன் அடிப்படையில் குற்றம் சுமத்தியிருந்தார் என கேள்வி எழுப்பியுள்ள அவர் இந்தக் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க நீதி அமைச்சரிடம் சான்றுகள் உள்ளனவா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அவ்வாறான எவரும் நாட்டில் தங்கியிருந்தால் அவர்களை நாடு கடத்த முடியும் எனவும் நீதி அமைச்சரின் கருத்து ஊடகங்களில் முஸ்லிம்களை இழிவுபடுத்தும் வகையில் வெளியிடப்பட்டிருந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான ஓர் விடயத்தை செய்தி அறிக்கையிடும் போது ஊடகங்களும் பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *