இலங்கை பிரதான செய்திகள்

இராணுவத்திடமுள்ள காணியை விடுவித்து தருமாறு கிளி.மகாவித்தியாலய சமூகம் கோரிக்கை :

kmv1
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இராணுவத்தின் பிடியில் காணப்படும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்குச் சொந்தமான காணியை விடுவித்துத் தருமாறு, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் குறித்த பாடசாலை சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.

கிளிநொச்சிக்கு இன்று திங்கட்கிழமை சென்றுள்ள  எதிர்க்கட்சித் தலைவர், கிளி.மகா வித்தியாலயத்தின் அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்டோருடன் விசேட  கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். இதன்போதே இக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அத்தோடு, யுத்த பாதிப்பிற்கு உள்ளாகிய மேற்படி பாடசாலைக்குத் தேவையான வளங்களை பெற்றுத்தருமாறும் எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த கோரிக்கைகளை வெகு விரைவில்  நிறைவேற்றுவதற்கான  நடவடிக்கைகளை எடுப்பதாக  எதிர்கட்சித்தலைவர்  பாடசாலை சமூகத்திற்கு உறுதியளித்துள்ளார்  எனவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

kmv2

இக் கலந்துரையாடலில்  எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் சி . சிறிதரன் , வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா . மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை  ,கிளிநொச்சி மகா வித்தியாலய அதிபர் , ஆசிரியர்கள் , அபிவிருத்திச் சங்கத்தினர்  என  பலரும் கலந்து கொண்டனர் . குறித்த சந்திப்பையடுத்து, இரணைமடு குளத்தின் அபிவிருத்தி தொடர்பில் கேட்டறிவதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் குறித்த பகுதிக்குச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

kmv4 kmv5 kmv9 kmv10kmv6 kmv7kmv11

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *