இலங்கை பிரதான செய்திகள்

பசில் ராஜபக்ஸ அமெரிக்காவிற்கு செல்ல அனுமதி கோரியுள்ளார்

basil Rajapaksha_CI
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அமெரிக்காவிற்கு செல்ல அனுமதி கோரியுள்ளார்.பசில் ராஜபக்ஸ அண்மையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளார். அமெரிக்காவிற்கு மூன்று மாத காலத்திற்கு செல்ல அனுமதிக்குமாறு பசில் ராஜபக்ஸ, கொழும்பு மேல் நீதிமன்றில் அனுமதி கோரியுள்ளார்.

டிசம்பர் மாதம் 10ம் திகதி முதல் மார்ச் மாதம் 2ம் திகதி வரையில் அமெரிக்காவில் தங்கியிருக்க அனுமதிக்குமாறு கோரியுள்ளார்.  மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அவர் இவ்வாறு அமெரிக்கா செல்ல அனுமதி கோரியுள்ளார். புதிய கட்சி  ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பசில் வெளிநாடு செல்வது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *