இலங்கை பிரதான செய்திகள்

யாழ்ப்பாணத்தில் வெள்ளத்தில் மூழ்கும் கிராமங்கள்.

5
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் மழையைத் தொடர்ந்து  நகரை அண்டிய வசந்தபுரம் நித்தியவெளி சூரியவெளி மற்றும் பொம்மைவெளி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி காணப்படுகின்றன.

மழை வெள்ளம் காரணமாக கிராம சேவகர் பிரிவுகளான ஜே-87,ஜே-85,ஜே-88 உள்ளிட்ட  இப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள்  நீர் புகுந்துள்ளதால் பலர் இடம்பெயர்ந்துள்ளதுடன் மேலும் பலர் தங்க இடம் அற்ற நிலையில் மழை வெள்ளத்துக்கு மத்தியில் பெரும் சிரமங்களை  எதிர்கொண்டு வருகின்றனர்.

வருடந்தோரும்  மழை ஆரம்பித்ததும் இவ்வாறான இடங்கள் மழை வெள்ளத்தில் மூழ்குவது வழமையாகிவிட்ட  போதும் இதற்கான நிரந்தரத் தீர்வுகாணப்படவோ அல்லது  மாற்று  ஏற்பாடுகளோ மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

4-2
திட்டமிடல் இல்லாமல் இந்தப் பகுதிகளில் குடிமனைகள் அமைக்கபட்டுள்ள அதேவேளை மக்கள் குடியிருந்த பின்னரும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான எந்தவித வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை.
இதனால் தான்  வருடாவருடம் இந்தப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கவும் மக்கள் இடம்பெயரவும் காரணமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

1 2 355dscf7599dscf7618 dscf7619

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *