இலங்கை பிரதான செய்திகள்

ஆவா குழுவை கொழும்பு நீதிமன்றில் முற்படுத்தியது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணானது. – மா.இளஞ்செழியன்

Elanchelian_CI
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரகாரம் கைது செய்யப்படுகின்ற நபர், எப்பிரதேசத்தில் கைதுசெய்யப்படுகிறாரோ, அப்பிரதேசத்துக்கு அருகில் இருக்கும் நீதிமன்றத்தில் முற்படுத்த வேண்டும் என அரசியலமைப்பு சட்டம் கூறுகின்றது. என , யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2002ஆம் ஆண்டு ஊர்காவற்துறை பிரதேசத்துக்கு தேர்தல் பிரச்சாரத்துக்காகச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது இனந்தெரியாதோர் நடத்திய தாக்குதலில் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரனையானது, நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ். மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தில் வாள்வெட்டுக்கள் மற்றும்  சமூக விரோத செயல்களில் ஈடுபட்டார்கள் எனும்    சந்தேகத்தின் அடிப்படையில் பலர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் கொழும்பு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர். கொழும்பு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவது தொடர்பாக வடமாகாணத்தில் எந்த நீதிமன்றங்களும் இல்லையா? என்ற கேள்வியும் எண்ணமும் மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளன.

ஆவா குழுவை சேர்ந்தவர்கள் எனும் குற்றச்சாட்டில் ஏற்கனவே பலர் யாழ்.மாவட்டம் உட்பட வடமாகாணத்தில்  கைதுசெய்யப்பட்டு 70 சதவீதமானவர்கள் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறன நிலையில் இங்குள்ள நீதிமன்றங்களில் இவ் வழக்குகள் விசாரணையில் உள்ள நிலையிலும் தற்போது கைதுசெய்யப்பட்டவர்கள் வெளிநீதிமன்றங்களில் முற்படுத்துவதானது இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரமும் சர்வதேச மனிதவுரிமை சட்டத்தினையும் அரசியல் சிவில் சட்டத்தினையும் மீறிய செயற்பாடு ஆகும்.

இலங்கையிலுள்ள அனைத்து நீதிமன்றங்களும் இலங்கையின் நீதிமன்றங்கள் என்றாலும் அரசியலமைப்பு சட்டத்தில் மிகத்தெளிவாக குறிப்பிட்டுள்ள விடயங்களை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. என மேலும் தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *