இலங்கை பிரதான செய்திகள்

பிணை முறி மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – சுதந்திரக் கட்சி

mahintha-amaraweera_ci
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது. பிணைமுறி மோசடியுடன் தொடர்புடையவர்கள் தராதரம் பாராது தண்டிக்கப்படுவர் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பிணைமுறி மோசடி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிகுழு வழங்கிய அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்ட போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். பிணைமுறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்த சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி நியமித்திருந்தார். இந்த குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்ந்த குறித்த குழு ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *