இலங்கை பிரதான செய்திகள்

கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் அரசாங்கம் விரைவில் ஒரு தீர்மானத்துக்கு வர வேண்டும் :

habis

யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆனபோதும்  இன்னும் பொதுமக்கள் தமது காணிகளுக்குசெல்ல  முடியாமல்  ஏக்கத்துடன் காத்திருக்க வேண்டிய நிலை தொடர்வது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள  முடியாதவொரு  விடயம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வலய பாடசாலைகளுக்கு  தளபாடங்கள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வுகள் காத்தான்குடி  அன்வர் வித்தியாலம் மற்றும் ஏறாவூர் ஜிப்ரியா வித்தியாலயங்களில் இடம்பெற்றபோது  அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே  கிழக்கு முதலமைச்சர்  இதனைக் கூறினார்

இங்கு தொடர்ந்தும்  கருத்து தெரிவித்த முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ,அரசாங்கம் இன்று நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப  பல் வேறு முயற்சிகளையும் வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வரும் நிலையில்  கிழக்கு மக்களின் நல்லெண்ணத்தை அவர்கள் பெற வேண்டுமானால் மக்களின் காணிகளை விடுவித்து அவர்கள் வாழ்வதற்கு உரிய சூழலை ஏற்படுத்த வேண்டும்.

கிழக்கில் பொதுமக்களின் காணிகள் இன்னும் படையினர் வசம் இருக்கையில் அவர்கள் பகுதியிலிருந்து படையினர் வெளியேறாமல் நல்லிணகத்தை ஏற்பட முடியாது என்பதை அனைவரும் புரிந்த கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

முஸ்லிம் தமிழ் சமூகங்கள் ஒரு போதும் நல்லிணக்கத்திற்கு தடையானவர்கள் அல்ல என்பதுடன் பெரும்பான்மையினரின் அவர்கள் மீதான பார்வை மாற்றப்பட வேண்டியுள்ளது எனத் தெரிவித்த அவர் சிங்களவர்கள் மாத்திரம் வசிக்கும் பகுதிகளில் பள்ளிவாசலையோ கோயிலையோ எழுப்பினால் எவ்வாறு அவர்களின் மன நிலை இருக்குமோ அது போன்றே சிறுபான்மையினரின் மனங்களில் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *