உலகம் பிரதான செய்திகள்

நிக்கரகுவா, எல்சால்வேடர் மற்றும் கொஸ்டாரிகா நாடுகளில் நிலநடுக்கம் :

nicara

நிக்கரகுவா, எல்சால்வேடர் மற்றும் கொஸ்டாரிகா நாடுகளில்  கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.2 ஆக் இந்த  நில நடுக்கம் பதிவாகியுள்ளது.  இந்த நிலநடுக்கமானது எல்சால்வேடரை மையமாக கொண்டு இது ஏற்பட்டதாகவும் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதும்   இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாக வில்லை.

மேலும்  அப்பகுதியில் மணிக்கு 175 கி.மீட்டர் வேகத்தில்  வீசிய ஓட்டோ எனப்படும்  சூறாவளிப்புயல் காணரமாக கடலில் கொந்தளிப்பு அதிகமாகி அதிக அளவில் அலைகள் எழும்பியதன் காரணமாக அந்த நாடுகளில் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டு பின்னர் விலக்கிக்க் கொள்ளப்பட்டுள்ளது.  கடற்கரை பகுதியில் பொது மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் நிக்கரகுவா நாட்டில் அவசர நிலை உத்தரவை அந்நாட்டு ஜனாதிபதி டானியல் ஓர்டெகா பிறப்பித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *