இலங்கை பிரதான செய்திகள்

நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

anurakumara
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நீண்ட காலமாக சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜே.வி.பி. கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்றைய தினம் பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஏழு ஆண்டுகளுக்கு மேல் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென கோரியுள்ளார். சிலர் குற்றச் செயல்களில் ஈடுபடாதவர்கள் எனவும் ஏனையவர்கள் ஏழு ஆண்டுகளுக்கும் குறைந்த சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *