இலங்கை பிரதான செய்திகள்

யாழ்.கோப்பாய் துயிலும் இல்ல முகப்பில் சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

img_2695
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்.கோப்பாய் துயிலும் இல்ல முகப்பில் சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவீரர்களின் பெற்றோர்களினால் சுடரெற்றப்பட்டது. குறித்த நிகழ்வில் வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் , வலி.வடக்கு மீள்குடியேற்ற குழு தலைவர் எஸ்.சஜீவன் ,வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் உறுப்பினர் எஸ்.சதிஸ் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.பன்னீர்செல்லவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கோப்பாய் துயிலும் கடந்த 2006ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் யுத்தம் ஆரம்பமானதை அடுத்து இராணுவத்தால் முற்றாக இடித்தழிக்கப்பட்டு பாரிய இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.  தற்போது இராணுவ முகாமாக மாற்றப்பட்டு உள்ள குறித்த துயிலும் இல்லம் முன்பாகவே இன்றைய தினம் சுடரெற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

img_2679 img_2684img_2698 img_2705

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *