இலங்கை பிரதான செய்திகள்

சாதாரண தர மாணவர்களுக்கு வகுப்புக்கள் நடாத்தத் தடை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

dept-of-examination

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மாணவ மாணவியருக்கு வகுப்புக்கள் கருத்தரங்குகள் நடாத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவ மாணவியர்களுக்கு இவ்வாறு கருத்தரங்குகள், வகுப்புக்கள் நடாத்துவதற்கு அனுமதிக்கப்படாது என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் இவ்வாறான கருத்தரங்குகள் வகுப்புக்கள் நடாத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு , பரீட்சைகள் நிறைவடையும் எதிர்வரும் 17ம் திகதி வரையில் அமுலில் இருக்கும் என பரீட்சைகள்  ஆணையாளர் எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

இவ்வாறு எங்கேனும் கருத்தரங்குகள், வகுப்புக்கள் சாதாரண தர மாணவர்களுக்கு நடத்தப்பட்டால் 119 என்ற காவல்துறை அவசர அழைப்பு பிரிவு அல்லது 1911 என்ற பரீட்சைத் திணைக்கள அவசர அழைப்புப் பிரிவிற்கு அறிவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *