உலகம் பிரதான செய்திகள்

ஃபிடல் காஸ்ட்ரோவின் சாம்பல் அணி வகுப்பிற்கு மக்கள் மரியாதை

கியுபாவின் மறைந்த தலைவர், ஃபிடல் காஸ்ட்ரோவின் சாம்பல் அடங்கிய குடுவை க்யூபா முழுவதுமான தனது நான்கு நாள் பயணத்தை தொடங்கியுள்ளது.கண்ணாடி பெட்டிக்குள் சாம்பல் குடுவையை ஏற்றிச் செல்லும் ராணுவ வாகனம்Image

கண்ணாடி பெட்டிக்குள் சாம்பல் குடுவையை ஏற்றிச் செல்லும் ராணுவ வாகனத்திற்கு தங்களது மரியாதையை செலுத்த அதிக அளவிலான மக்கள் கூட்டம் ஃபிடல் காஸ்ட்ரோவின் பெயரை கோஷமிட்டும், க்யூபாவின் கொடியை அசைத்தும் தலைநகர் ஹவானாவில் அணி வகுத்து நிற்கும் காட்சிகளை தொலைக்காட்சிப் படங்கள் காட்டின.

இந்த அஸ்தி அடங்கிய வாகனம், புரட்சி தொடங்கிய சாண்டியாகோ டே க்யூபாவை நோக்கிய நான்கு நாள் பயணத்தை தொடங்கியுள்ளது.

வழிநெடுகிலும் மக்கள் கூட்டம் ஃபிடல் காஸ்ட்ரோவின் பெயரை கோஷமிட்டும், க்யூபாவின் கொடியை அசைத்தும் தலைநகர் ஹவானாவில் அணி வகுத்து நின்றனர்

காஸ்ட்ரோ 1959 ஆம் ஆண்டு க்யூபாவில் நடந்த ஆட்சியை தூக்கியெறிந்து தனது வெற்றி அணி வகுப்பை நடத்திய பாதையின் முடிவிலிருந்து தொடக்கத்திற்கு இந்த சாம்பல் பயணிக்கவுள்ளது. காஸ்ட்ரோவின் சாம்பல் ஞாயிறன்று அடக்கம் செய்யப்படவுள்ளது.

BBC

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *