இலங்கை பிரதான செய்திகள்

ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய அரச தரப்பு சாட்சியாளருக்கு விசேட பாதுகாப்பு

raviraj
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கருணா தரப்பினால் ஆபத்து ஏற்படக் கூடும் என்ற அச்சம் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்குத் தொடர்பான பிரதான அரச தரப்பு  சாட்சியாளருக்கு சிறையில் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அரச தரப்பு சாட்சியாளரான பிரதிவிராஜ் மானம்பேரி என்ற முன்னாள் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு காவல்துறை உத்தியோகத்தருக்கே இவ்வாறு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அரச தரப்பு சாட்சியாளர் பிரதிவிராஜிற்கு, கருணா தரப்பினால் சிறையில் ஆபத்து ஏற்படக் கூடும் என அவரது சட்டத்தரணி தர்சன ரன்முத்துகல நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிர் அச்சுறுத்தல் குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பிரதிவிராஜிற்கு சிறையில் தனியறை வழங்குமாறு நேற்று உத்தரவிட்டுள்ளது. விசேட ஜூரிகள் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு ஒவ்வொரு நாளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் இன்றைய தினமும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

இந்தக் கொலையுடன் கருணா தரப்பிற்கு தொடர்புண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *