இலங்கை பிரதான செய்திகள்

யாழில் வீசும் காற்று காரணமாக மரம் முறிந்து வீழ்ந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
15202566_1268721593189630_777636234439148535_n

சாவகச்சேரியை சேர்ந்த பூநகரி கட்டட திணைக்களத்தில் தொழிநுட்ப உத்தியோகஸ்தராக கடமையாற்றும் சச்சிதானந்தன் கஜந்தன் (வயது 30) எனும் நபரே உயிரிழந்தவராவார். குறித்த சம்வம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உயிரிழந்த நபர் புதன்கிழமை காலை சாவகச்சேரியில் இருந்து தனது அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை சாவகச்சேரி பகுதியில் வீதியோரமாக இருந்த மரம் ஒன்று காற்றினால் முறிந்து வீதிக்கு குறுக்காக வீழ்ந்தது. அதனுள் அகப்பட்டு குறித்த இளைஞர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார்.

உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டு உள்ளது.

15283944_1268721833189606_7758254204216852518_n

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *