பிரதான செய்திகள் விளையாட்டு

தென் ஆபிரிக்க கிரிக்கட் சுற்றுப் பயணத்தில் மெத்யூஸ், சந்திமால் இணைவு

anjalo-mathiews-denesh-santhimal
குளோபல்தமிழ்ச் செய்தியாளர்

தென் ஆபிரிக்க கிரிக்கட் சுற்றுப் பயணத்தில் இலங்கை அணியின் தலைவர் அன்ஜலோ மெத்யூஸ் மற்றும் தினேஸ் சந்திமால் ஆகியோர் இணைந்து கொள்ள உள்ளனர். உபாதை காரணமாக மெத்யூஸ் அண்மைய போட்டிகளில் பங்கேற்கவில்லை. அதேபோன்று உப தலைவர் தினேஸ் சந்திமாலும் உபாதை காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார்.

தற்போது இருவரும் உடல் நிலை தேறியுள்ளதாகவும் போட்டிகளில் பங்கேற்கக்கூடிய உடல் தகுதி கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் சிம்பாப்வேக்கு இலங்கை அணி மேற்கொண்டிருந்த கிரிக்கட் சுற்றுப் பயணத்தில் இருவரும் பங்கேற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  இந்தநிலையில் தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான போட்டித் தொடரிலும் இருவரும் பங்குபற்ற உள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *