இலங்கை பிரதான செய்திகள்

பிணை வழங்குமாறு கோரி பிள்ளையான் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்

pillaiyan
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதல்வருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் பிணை வழங்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார். அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதனால் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக பிள்ளையான் அடிப்படை உரிமை மீறல் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் பயங்கரவாதத் தடைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார் என்;பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *