இலங்கை பிரதான செய்திகள்

இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக பாகிஸ்தான் அறிவிப்பு

குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

pakistan-srilanka

இலங்கையுடன் மிக நெருங்கிய உறவுகளை பேணி வருவதாக தெரிவித்துள்ள பாகிஸ்தான் இலங்கையுடனான உறவுகளை மேலும்  வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக அறிவித்துள்ளது.

இலங்கை இராணுவப் பிரதிநிதிகள், பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் சயிட் சாகீல் ஹூசெய்னை சந்தித்துள்ளனர். 27 பேரைக்கொண்ட இராணுவப் பிரதிநிதிகள், கொழும்பில் அமைந்துள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரகத்தில் தூதுவரை சந்தித்துள்ளனர்.

இந்தப் பிரதிநிதிகள் குழுவினர் விரைவில் போட்டி ஒன்றில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானுக்கு விஜயம் செய்ய உள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையில் மிகவும் நெருக்கமான உறவு தொடர்ச்சியாக பேணப்பட்டு வருவதாக தூதுவர் சாகீல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *